முகப்பு
இந்தியா

3 லட்சத்தைக் கடந்த ஒருநாள் கரோனா பாதிப்பு; 2,104 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 2,104 பேர் உயிரிழந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:04 PM
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 2,104 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் நாள்தோறும் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1,59,30,965-ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,104 பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 1,84,657-ஆக உயர்ந்துள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் 1,78,841 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,54,880 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 22,91,428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தியாவில் இதுவரை 13,23,30,644 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →