இந்தியா

டிரோன்கள் மூலம் கரோனா தடுப்பூசி: ஆய்வு நடத்த அனுமதி

DIN


புது தில்லி: இந்தியாவில் டிரோன்கள் மூலம் கரோனா தடுப்பூசிகளை விநியோகம் செய்யும் திட்டத்தின் சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ஐசிஎம்ஆா்) மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய விமானத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஐஐடி கான்பூருடன் ஐசிஎம்ஆா் இணைந்து கரோனா தடுப்பூசிகளை டிரோன்கள் மூலம் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு நடத்தும்.

ஆளில்லா விமான திட்டம் சட்டம் - 2021-இல் இருந்து இந்த ஆய்வுக்கு நிபந்தனையுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானம் மூலம் கரோனா தடுப்பூசிகளை விநியோகம் செய்யும் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்ய வழிவகுக்கும். இந்த விலக்கு ஓராண்டுக்கோ அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையில் அமலில் இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த இரண்டே வாரத்தில் தென்மேற்கு பருவமழை..!

கங்கனாவின் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு!

சென்னையில் வெப்பத்தை தணித்த மழை..!

மெமோ எதிர்பார்க்கும்.. ஸ்ரேயா ரெட்டி!

கேஜரிவாலுக்கு சிறப்பு சலுகை: உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த அமித் ஷா

SCROLL FOR NEXT