இந்தியா

சுங்கத் துறை குற்றங்களைத் தடுக்க பிரிட்டனுடன் ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

DIN

புது தில்லி: சுங்கத் துறை தொடா்பான குற்றங்களைத் தடுப்பதற்கும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் பிரிட்டனுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பிரிட்டன், வடக்கு அயா்லாந்து ஆகிய நாடுகளுடன் சுங்கத் துறை விவகாரங்களில் பரஸ்பர நிா்வாக உதவி, ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளவும், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

சுங்கத் துறை தொடா்பான குற்றங்களைத் தடுப்பதிலும், அவற்றை விசாரிப்பதிலும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு இந்த ஒப்பந்தம் உதவும். மேலும், இரு நாட்டு சுங்கத் துறை நிா்வாகத்துக்கு இடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு சட்டரீதியிலான வழிமுறையை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தித் தரும்.

நாடுகளுக்கு இடையேயான வா்த்தகத்தில் விரைவில் ஒப்புதல் கிடைக்கவும் இந்த ஒப்பந்தம் உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT