ஊரடங்கிற்கு ஒத்துழையுங்கள்!: மக்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள்
கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் பிறப்பிக்கப்படவுள்ள 2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா வேண்டுகோள்
கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் பிறப்பிக்கப்படவுள்ள 2 வார முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் நாளை (ஏப்.29) மாலை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படவுள்ளது. எனினும் காலை 6 முதல் 10 மணி வரை அத்தியாவசிய பொருள்களுக்கு அனுமதி வழங்கப்படும். 10 மணிக்குப் பிறகு அனைத்து கடைகளும் மூடப்படும். பொதுப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இது குறித்து முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசியதாவது, கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 2 வாரங்களுக்கு கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்தால் கரோனா தொற்றி பரவலைக் கட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.