முகப்பு
இந்தியா

தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும்: சித்தராமையா

கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:07 PM
பகிர்:

கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

கர்நாடக சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான சித்தராமையா, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், 

கரோனா தடுப்பூசியை மத்திய அரசு மட்டும் கொள்முதல் செய்ய வேண்டும். இதன்பின்னர் மாநிலங்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும். மேலும் கரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் நோக்கில் பட்ஜெட்டில் ரூ. 35,000 ஒதுக்க வேண்டும். 

இந்தியாவில் முன்னதாக போலியோ, சின்னம்மை உள்ளிட்ட நோய்களை ஒழிக்க இலவச தடுப்பூசிகளை வழங்கியதுபோல, கரோனாவுக்கும் இலவச தடுப்பூசிகளை அளிக்க வேண்டும். கண்டிப்பாகத் இது சாத்தியமும்கூட. 

இது அனைத்து மக்களும் எளிதாக தடுப்பூசியை அணுகுவதற்கு உறுதி புரியும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியுடன் மக்களின் உடல்நலனும் மேம்படும்.

மாநிலத்தைப் பொருத்தவரை 14 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் இழப்பு அதிகம். எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி புரிய வேண்டும் என்று கூறியுள்ளார். 

இலவச அரிசி திட்டத்தை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும். மேலும் ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →