கேரள கட்டுப்பாட்டு மையம் 
இந்தியா

கரோனா பேரிடருக்கு எதிராக கவனம் பெறும் கேரள கட்டுப்பாட்டு மையம்

கரோனா பேரிடரைக் கட்டுப்படுத்த கேரளத்தில் மாநில அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையம் முக்கிய கவனம் பெற்றுள்ளது.

DIN

கரோனா பேரிடரைக் கட்டுப்படுத்த கேரளத்தில் மாநில அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையம் முக்கிய கவனம் பெற்றுள்ளது.

கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு மாநிலங்களில் கேரளமும் ஒன்று. தொடக்கம் முதலே படிப்படியாக அதிகரித்து வந்த கரோனா ஒருநாள் பாதிப்பு கேரளத்தில் 38 ஆயிரமாக உள்ளது. 

எனினும் கரோனாவால் ஏற்படும் இறப்பைக் கட்டுப்படுத்த கேரள மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மாநில தலைநகர் மற்றும் மாவட்ட மையங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு கட்டுப்பாட்டு மையங்கள் முக்கிய கவனம் பெற்றுள்ளன. 

மாநில அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையங்களில் கரோனா நோயாளிகலுக்கு மருத்துவ வசதிகளை உறுதிப்படுத்துவது, ஆக்சிஜன் இருப்பு, தேவை, விநியோகம் மற்றும் தடுப்பூசி மையங்கள் ஒருங்கிணைப்பு என முக்கிய கரோனா தடுப்பூசி பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஆக்சிஜன் தேவையை அறிந்து செயல்படுத்த பிரத்யேக அறைகள், தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுவது இந்த கட்டுப்பாட்டு மையத்தின் முக்கிய அம்சமாகும்.

கரோனா முதல் அலையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்ட கேரளம் ஆக்சிஜன் தேவையை முன்கூட்டியே அறிந்து அதன் உற்பத்தியை மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் இரட்டைக் கொலை வழக்கில் 4 போ் கைது

இயன்முறை மருத்துவ தினம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மத்திய அரசின் பல்வேறு பதவிகளுக்கு யுபிஎஸ்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

காஜிப்பூா் பால் பண்ணை கோயில் வளாக சட்டவிரோத கடைகள் அகற்றம்: டியுஸ்ஐபி நடவடிக்கை

திருவண்ணாமலை மாவட்ட வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடு

SCROLL FOR NEXT