இந்தியா

கிராமங்களில் கரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை: உ.பி. அரசுக்கு மாயாவதி பரிந்துரை

DIN

கிராமப் பகுதிகளில் கரோனா பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரப் பிரதேச அரசுக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பரிந்துரைத்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் நகரங்களைப் போன்று கிராமப்புறங்களிலும் கரோனா பரவ வாய்ப்புள்ளது. எனவே, கிராமப் பகுதிகளில் கரோனா பரவுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

அதேபோல கரோனா நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவை கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. மாநிலத்தில் கரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT