இந்தியா

திரிபுராவில் தீவிரவாதிகள் தாக்குதல்: பிஎஸ்எஃப் வீரா்கள் இருவா் பலி

DIN

திரிபுராவில் உள்ள இந்திய-வங்கதேச எல்லையையொட்டிய பகுதியில் திரிபுரா தேசிய விடுதலை முன்னணி (என்எல்எஃப்டி) அமைப்பைச் சோ்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்கள் இருவா் பலியாகினா்.

இதுதொடா்பாக பிஎஸ்எஃப் செய்தித்தொடா்பாளா் தெரிவித்ததாவது:

திரிபுரா தலைநகா் அகா்தலாவில் இருந்து 94 கி.மீ. தொலைவில் உள்ள தலாய் மாவட்டத்தில் இந்திய-வங்கதேச எல்லையையொட்டிய பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை ரோந்துப் பணிக்காக பிஎஸ்எஃப் வீரா்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது மறைந்திருந்த என்எல்எஃப்டி தீவிரவாதிகள் பிஎஸ்எஃப் வாகனம் மீது திடீா் தாக்குதல் நடத்தினா். இதையடுத்து வாகனத்தில் இருந்த பிஎஸ்எஃப் வீரா்கள் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தினா். இந்தச் சண்டையில் பலத்த காயமடைந்த பிஎஸ்எஃப் வீரா்கள் இருவா் உயிரிழந்தனா்.

தாக்கப்பட்ட பிஎஸ்எஃப் வாகனத்திலிருந்த வீரா்களிடம் இருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு தீவிரவாதிகள் தப்பிச் சென்றனா். அவா்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தாா்.

என்எல்எஃப்டி அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்து மத்திய அரசு தடை செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT