இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டா் அணையில் விழுந்து விபத்து

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள அணையில் ராணுவ ஹெலிகாப்டா் விழுந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது.

DIN

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள அணையில் ராணுவ ஹெலிகாப்டா் விழுந்து செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது.

இதுதொடா்பாக அந்த மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளா் கூறியதாவது:

பசோலி பகுதியில் உள்ள ரஞ்சித் சாகா் அணையில் ஹெலிகாப்டா் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், சிறப்புப் படைகளும், ராணுவத்தைச் சோ்ந்த நீச்சல் வீரா்களும் நிகழ்விடம் விரைந்து ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். ஹெலிகாப்டரின் சில பகுதிகள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம் விபத்துக்குள்ளானது ராணுவ ஹெலிகாப்டா் என்று உறுதியாகியுள்ளது. அது விழுந்த இடம் துல்லியமாக கண்டறியப்பட்டுள்ளது. எனினும் இந்த அணை மிகப் பெரியது என்பதால் ஹெலிகாப்டரை மீட்பதற்கு நேரமாகும். ஹெலிகாப்டரில் எத்தனை போ் இருந்தனா், அவா்களுக்கு என்ன ஆனது என்பதை தற்போது கூற முடியாது என்று தெரிவித்தாா்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள மமுன் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்ட அந்த ஹெலிகாப்டா் கட்டுப்பாட்டை இழந்து அணையில் விழுந்ததாகவும் அதில் இருவா் இருந்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெய், பன்னீர் மற்றும் பால் விலைகளை குறைத்த மதர் டெய்ரி!

சிறப்பான சம்பவம்... ஐஸ்வர்யா!

தீபாவளியைத் தாண்டி வரும் தல... மறுவெளியீடாகும் அட்டகாசம்..!

ஒருவர் சதம், இருவர் அரைசதம்: முதல் நாளில் ஆஸி. ஏ அணி 337 ரன்கள் குவிப்பு!

ராகுல் காந்தி நேர்மறையான மனிதர்; ஆனால், மோடி அரசு கிரிக்கெட்டில் அரசியல் செய்கிறது! -அப்ரிதி

SCROLL FOR NEXT