இந்தியா

கரோனாவில் விழாக்களா?: மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

DIN

கரோனா பரவல் முழுவதுமாக குறையாத நிலையில், விழாக்காலத்தையொட்டி பொதுமக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கரோனா இரண்டாம் அலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இதனிடையே ஒருசில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

பள்ளிகள் திறப்பது, வணிக வளாகங்களுக்கு அனுமதி அளிப்பது போன்ற தளர்வுகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் அடுத்தடுத்து உள்ளூர் விழாக்கள் வரவுள்ளதால், பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக மாநில அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், விழாக்களில் மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளது. இதனைத் தடுக்கும் நோக்கில் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT