முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,126 பேருக்கு கரோனா; 195 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,126 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6,126 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மகாராஷ்டிரத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 6,126 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63,27,194-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 195 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,33,410-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 7,436 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 61,17,560-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 72,810 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →