இந்தியா

கர்நாடக எல்லை மாவட்டங்களில் இரவுநேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு

DIN

கர்நாடகத்தில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக எல்லைப் பகுதி மாவட்டங்களில் பகுதி நேரப் பொதுமுடக்கத்தை அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலை பாதிப்பிலிருந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களும் மீண்டு வரும் நிலையில் ஒருசில மாநிலங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் கர்நாடகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்திவருகிறது.

அதன் ஒரு பகுதியாக தொற்று பாதிப்பு அதிகம் உள்ள கேரளம் மற்றும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் எல்லைப் பகுதி மாவட்டங்களில் பகுதிநேரப் பொதுமுடக்கத்தை அமல்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்தில் இருந்து வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரையில் இரவுநேரப் பொது முடக்கம் விதிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனினும் மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 23ஆம் தேதியில் இருந்து 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தொற்று பாதிப்பு நிலவரங்களுக்கேற்ப ஆகஸ்ட் மாத இறுதியில் இதர வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கர்நாடக மாநில அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உன் பார்வையில்..

இளைஞர் பலி: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

SCROLL FOR NEXT