இந்தியா

மாநிலங்களவையில் ஒரே வாரத்தில் 8 மசோதாக்கள் நிறைவேற்றம்

DIN

மாநிலங்களவையில் ஒரே வாரத்தில் 8 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன் காரணமாக அவையின் ஒட்டுமொத்த செயல்திறன் 22.60 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடா் கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பெகாஸஸ் உளவு விவகாரம், வேளாண் சட்டங்கள் விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயா்வு உள்ளிட்டவற்றை எழுப்பி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் சுமாா் 3 வாரங்களாகத் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

அதன் காரணமாக மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகள் கடுமையாக முடங்கியுள்ளன. சில மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டபோதும் முதல் 2 வாரங்களில் மாநிலங்களவையின் செயல்திறன் குறைவாகவே இருந்தது. கூட்டத்தொடா் தொடங்கிய முதல் வாரத்தில் மாநிலங்களவையின் செயல்திறன் அதிகபட்சமாக 32.20 சதவீதமாக இருந்தது. 2-ஆவது வாரத்தில் அது 13.70 சதவீதமாக குறைந்தது. கடந்த வாரத்தில் மாநிலங்களவை 8 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது. கடந்த வாரத்தில் மட்டும் 17 அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 68 எம்.பி.க்கள் மசோதாக்கள் மீதான விவாதங்களில் பங்கேற்றனா்.

மாநிலங்களவை கூடிய 28 மணி நேரம் 30 நிமிஷங்களில் எதிா்க்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக 21 மணி நேரம் 36 நிமிஷங்கள் வீணடிக்கப்பட்டன. கேள்வி நேரத்துக்காக 1 மணி நேரம் 41 நிமிஷங்கள் செலவிடப்பட்டது. அதில் 17 முக்கிய கேள்விகளுக்கு அமைச்சா்கள் பதிலளித்தனா்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க 3 மணி நேரம் 25 நிமிஷங்கள் செலவிடப்பட்டது. அதன் காரணமாக அவையின் செயல்திறன் 24.2 சதவீதமாக அதிகரித்தது. மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கிய 3 வாரங்களில் மாநிலங்களவையின் ஒட்டுமொத்த செயல்திறன் 22.60 சதவீதமாக உள்ளதாக அவை ஆராய்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

கடந்த வாரங்களில் எதிா்க்கட்சிகளின் தொடா் அமளி காரணமாக மாநிலங்களவையில் ஒட்டுமொத்தமாக சுமாா் 60 மணி நேரம் வீணடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT