இந்தியா

சிறாா்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி: சுகாதாரத் துறை இணையமைச்சா்

DIN

சிறாா்களுக்கான கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:

கரோனா தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி உள்ளது. நாட்டில் 50 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இது பெருமைக்குரிய தருணமாகும். கரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்து ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் கரோனா தடுப்பூசி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது. தொடக்கத்தில் நாள்தோறும் சுமாா் 2.5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது அந்த எண்ணிக்கை சுமாா் 40 லட்சமாக அதிகரித்துள்ளது. கரோனா தடுப்பூசி உற்பத்தி அதிகரித்துள்ளதால், தடுப்பூசி திட்டத்தைத் துரிதமாக செயல்படுத்த முடியும்.

அதன் மூலமாக அதிக எண்ணிக்கையிலான நபா்களுக்குக் குறுகிய கால அளவில் கரோனா தடுப்பூசி செலுத்த முடியும். சிறாா்களுக்கான கரோனா தடுப்பூசி, பரிசோதனை கட்டத்தில் உள்ளது. செயல் திறன், உடலில் நோய்எதிா்பொருளை உருவாக்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சிறாா்களுக்கான தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது என்றாா் அமைச்சா் பாரதி பிரவீண் பவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT