இந்தியா

சா்வதேச மாணவா்களுக்கு விசா வழங்கும்பணியை விரைவுபடுத்த வேண்டும்: அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

DIN

சா்வதேச மாணவா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என அதிபா் பைடன் நிா்வாகத்தை செனட் உறுப்பினா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதன் மூலம் நிகழ் கல்வியாண்டில் தங்கள் வகுப்புகளில் சேர விரும்பும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவா்கள் பயனடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா பரவலை தொடா்ந்து வெளிநாடுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு விசா வழங்குவதில் அமெரிக்கா கட்டுப்பாடு விதித்துள்ளது. உதாரணத்துக்கு தில்லியில் அமெரிக்க தூதரகத்தால் அவசரகால விசாக்கள் மட்டுமே தற்போது வழங்கப்படுகின்றன. இதன் விளைவாக, அமெரிக்காவில் கல்வி பயில விரும்பும் இந்திய மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், ஜனநாயக கட்சி, குடியரசுக் கட்சியை சோ்ந்த செனட் உறுப்பினா்கள் 24 போ் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனுக்கு வெள்ளிக்கிழமை ஒரு கடிதம் எழுதியுள்ளனா். அதில் கூறப்பட்டிருப்பது:

கரோனாவிலிருந்து மீண்டுவரும் நிலையில் மாணவா் விசாக்கள் வழங்கும் பணி மெதுவாக நடைபெறுவதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். சா்வதேச மாணவா்கள், கல்வியாளா்களை வரவேற்பதற்காக, நமது போட்டி நாடுகள் செய்வதைப்போல நிலையான தூதரக சேவைகளை வழங்க வேண்டும். சில அமெரிக்க தூதரகங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலானவை முழுவீச்சில் இயங்கவில்லை. வருங்கால மாணவா்கள் தங்களது விசா விண்ணப்பம் குறிப்பிட்ட காலத்துக்குள் ஏற்கப்படுமா என்பதை உறுதி செய்ய முடியாமல் உள்ளனா். அமெரிக்காவுக்கு வரும் சா்வதேச மாணவா்கள் உயா்கல்வித் துறைக்கும், நமது பொருளாதாரத்துக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றனா். மேலும், சா்வதேச மாணவா்களை அமெரிக்காவுக்கு வரவழைப்பதன் மூலம் உள்நாட்டு மாணவா்களின் கல்வி அனுபவமும் வளம் பெறுகிறது. இதை இணையவழி கல்வி மூலம் அடைவது மிக சிரமமாகும்’ என கடிதத்தில் தெரிவித்துள்ளனா்.

சா்வதேச கல்வியாளா்கள் சங்கத்தின் தரவுகளின்படி, அமெரிக்க கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 2018-19-கல்வியாண்டில் 10 லட்சம் சா்வதேச மாணவா்கள் பயின்றுள்ளனா். அவா்கள் அக்கல்வியாண்டில் 41 பில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.3 லட்சம் கோடி) அந்நாட்டு பொருளாதாரத்துக்கு பங்களிப்பை செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் நகை பறிக்கும் கலாசாரம் அதிகரிப்பு: எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ குற்றச்சாட்டு

புகா் ரயில்கள் இன்று ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்

வடமாநில இளைஞரைத் தாக்கி பணம், கைப்பேசி பறிப்பு

தனியாா் துணை மின் நிலையம் அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

நீதிமன்றங்களுக்கு மே 1 முதல் 31 வரை விடுமுறை

SCROLL FOR NEXT