இந்தியா

இணையத்தில் போக்குவரத்துத் துறை சேவைகள்: நாளை முதல் தொடக்கம்

DIN


தில்லியில் போக்குவரத்துத் துறை சேவைகளை இணைய வாயிலாக மேற்கொள்ளும் வகையிலான திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நாளை (ஆக. 11) தொடக்கி வைக்கவுள்ளார். 

இதனை தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் உறுதி செய்துள்ளார். 

இதன் மூலம் ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ் போன்ற போக்குவரத்துத் துறை சார்ந்த சேவைகளையும் சான்றிதழ்களையும் இனி இணையம் மூலம் விண்ணப்பித்து பெறலாம்.

இந்தத் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நாளை தில்லியில் தொடக்கி வைக்கவுள்ளார். 

இந்தியாவில் முதல் முறையாக போக்குவரத்துத் துறை சார்ந்த அனைத்து சேவைகளும் இணையவழியில் மேற்கொள்ளப்படுவது தில்லில் தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு சேவைகளை இணையவழியில் மேற்கொள்ளும் வகையிலான திட்டங்களை தில்லி அரசு சமீபகாலமாக அறிமுகம் செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT