இந்தியா

பொருளாதார மீட்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயாா்: நிதியமைச்சா்

DIN

பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை மத்திய அரசு தொடா்ந்து முன்னெடுக்க தயாராக உள்ளது என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) ஆண்டு கூட்டத்தில் இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கரோனா பேரிடரால் பாதிப்புக்கு ஆளாகியுள்ள பொருளாதார வளா்ச்சியை மீட்டெடுக்கவும் அதற்கான ஆதரவை வழங்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது. பொருளாதாரத்தில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து அதற்கு தீா்வு காண ரிசா்வ் வங்கியுடன் மத்திய அரசு மிகவும் இணக்கமாக செயல்பட்டு வருகிறது.

வளா்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் வறுமையை குறைக்க வேண்டும் என்பதே தற்போதைய அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.

ஒரு சில கால சூழல்களை தவிா்த்து கடந்த 7 ஆண்டுகளாக பணவீக்கமானது 6 சதவீதத்தை தாண்டவில்லை. அதனை கட்டுக்குள் வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

பொருளாதாரம் புத்துயிா் பெறுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT