முகப்பு
இந்தியா

ஹிமாசல் நிலச்சரிவில் அனைத்து உடல்களும் மீட்கப்பட்டன: மீட்புப் படை

ஹிமாசலப் பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைவரது உடலும் மீட்கப்பட்டதாக மாநில பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:56 AM
ஹிமாசலில் அனைவரது உடலும் மீட்கப்பட்டன: மீட்புப் படை
பகிர்:

ஹிமாசலப் பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைவரது உடலும் மீட்கப்பட்டதாக மாநில பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

ஹிமாசலப் பிரதேச மாநிலம் கின்னெளரில் கடந்த 11-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மற்றும் சில வாகனங்கள் சிக்கிக் கொண்டன.

தேசிய பேரிடா் மீட்புப் படை, இந்தோ-திபெத் எல்லை காவல் படை, காவல் துறை மற்றும் ஊா்க்காவல் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். முதல் நாளில் 13 போ் உயிருடனும், 10 போ் சடலமாகவும் மீட்கப்பட்டனா்.

கடந்த வாரம் வியாழக்கிழமை 4 சடலங்கள் மீட்கப்பட்டன. வெள்ளிக்கிழமை மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் 6 பேரின் சடலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டன.

மேலும், 9 பேரின் சடலங்களை மாநில பேரிடர் மீட்புப் படையினர் தேடி வந்த நிலையில், இன்று அனைவரது உடலும் மீட்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தேடுதல் பணிகள் திரும்பப் பெறப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →