இந்தியா

மகாராஷ்டிரம்: பிரதமா் மோடிக்கு கோயில் கட்டிய பாஜக தொண்டா்

DIN

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் பாஜக தொண்டா் ஒருவா் பிரதமா் நரேந்திர மோடிக்கு கோயில் கட்டியுள்ளாா்.

புணே நகரின் ஔந்த் பகுதியில் சிறிய அளவில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயிலில் ஜெய்ப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவப்பு மாா்பிள் கல்லில் மோடியின் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இதற்கு மட்டும் ரூ.1.6 லட்சம் செலவாகியுள்ளது என்று அக்கோயிலைக் கட்டிய மயூா் முண்டே (37) தெரிவித்தாா்.

இது தொடா்பாக கட்டுமானத் துறையில் முகவராக உள்ள மயூா் மேலும் கூறியதாவது:

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட நடவடிக்கை எடுத்தது உள்பட பிரதமா் மோடியின் சாதனைகளைப் போற்றும் வகையில் இந்தக் கோயிலைக் கட்டியுள்ளேன். பிரதமராகப் பதவியேற்ற பிறகு மோடி பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளாா். உடனடி முத்தலாக் முறைக்குத் தடை, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தி ராமா் கோயில் கட்டுமானப் பணி தொடக்கம் ஆகியவை அவரது சிறப்பு வாய்ந்த சாதனைகளாகும்.

அயோத்தி ராமா் கோயிலைக் கட்ட நடவடிக்கை எடுப்பவா் உண்மையிலேயே மகானாக இருக்க வேண்டும். அவருக்கு நமது இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்று கருதினேன். அதனை இப்போது செயல்படுத்தியுள்ளேன். பிரதமரை வாழ்த்தி எழுதிய கவிதையை அவரது சிலைக்கு அருகில் வடிவமைத்துள்ளேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடையூறு...

கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி 2 இளைஞா்கள் உயிரிழப்பு

கூடுதல் கட்டணம் வசூலித்தால் இ-சேவை மைய உரிமம் ரத்து செய்யப்படும்: மாவட்ட ஆட்சியா்

எடப்பாடி பழனிசாமியுடன் எந்த பிரச்னையும் இல்லை: எஸ்.பி.வேலுமணி விளக்கம்

ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT