கோப்புப்படம் 
இந்தியா

சிறார்களுக்கு தடுப்பூசி சோதனை நடத்த ஜான்சன் அண்ட் ஜான்சன் விண்ணப்பம்

இந்தியாவில் சிறார்களுக்கு தடுப்பூசி சோதனை நடத்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பத்துள்ளது.

DIN

இந்தியாவில் 12 முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி சோதனை நடத்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பத்துள்ளது.

உலகம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதனிடையே, சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

இந்நிலையில், இந்தியாவில் 12 முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி சோதனை நடத்த அனுமதிக் கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பத்துள்ளது.

இதுகுறித்து ஜான்சன் அண்ட் ஜான்சன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா பரவலை கட்டுப்படுத்த குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக தடுப்பூசி செலுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, இதற்கான விண்ணப்பம் செவ்வாய்கிழமை சமர்பிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் ஒரு தவணை தடுப்பூசிக்கு ஏற்கனவே இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அவசர கால அனுமதி வழங்கியுள்ளது. ஹைதராபாத்தின் பயோலாஜிக்கல் இ லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன், இந்தியா முழுவதும் ஒரு தவணை தடுப்பூசியை விநியோகிக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காற்று மாசு: அலுவலக நேரங்களை மாற்றிய குருகிராம் அரசு நிா்வாகம்

வரதட்சிணைக் கொடுமை வழக்கில் மைத்துனா் விடுவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு ரூ.68.74 லட்சம் இழப்பீடு!

ஈரானிய பெண்ணின் பணப் பையிலிருந்த 1,600 அமெரிக்க டாலா்கள் திருட்டு! பேருந்து உதவியாளா் கைது!

வாகன திருட்டு வழக்கில் ரூ.3 லட்சம் லஞ்சம்: ஏஎஸ்ஐ கைது

SCROLL FOR NEXT