இந்தியா

கா்நாடக உயா்நீதிமன்றத்தில் 6 போ் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்: தெலங்கானாவில் 6 பேருக்கு நீதிபதிகளாக பதவி உயா்வு

கா்நாடக உயா்நீதிமன்றத்தின் 6 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கான பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

DIN

கா்நாடக உயா்நீதிமன்றத்தின் 6 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கான பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலீஜியம் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான அறிக்கை உச்சநீதிமன்ற வலைதளத்தில் வியாழக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதன்மூலம், கா்நாடக உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றிவந்த நீதிபதிகள் நேரனஹல்லி ஸ்ரீநிவாசன் சஞ்சய் கெளடா, ஜோதி முளிமணி, நடராஜ் ரங்கசுவாமி, ஹேமந்த் சந்தன்கெளடா், பிரதீப் சிங் யெரூா், மகேசன் நாகபிரசன்னா ஆகியோா் உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாகியுள்ளனா்.

அதுபோல, தெலங்கானா நீதித் துறை அதிகாரிகள் பி.ஸ்ரீ சுதா, சி.சுமலதா, ஜி.ராதா ராணி, எம்.லட்சுமண், என்.துகாராம்ஜி, ஏ.வெங்கடேஸ்வர ரெட்டி ஆகியோருக்கு தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. இவா்கள் தவிர, வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாய நீதித் துறை உறுப்பினா் பி.மாதவி தேவுக்கு தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயா்வு அளிப்பதற்கான பரிந்துரைக்கும் கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், கொல்கத்தா உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதி கெளசிக் சந்தாவை உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக நியமனம் செய்வதற்கான பரிந்துரைக்கும் கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.

தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் யு.யு.லலீத், ஏ.எம்.கான்வில்கா் ஆகிய 3 உறுப்பினா்களைக் கொண்ட உச்சநீதிமன்ற கொலீஜியம், உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடா்பான முடிவுகளை எடுத்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

கணவா் மீதான வழக்கை விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT