இந்தியா

குஜராத்தில் நிலநடுக்கம்

DIN

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 4.1 அலகுகளாக பதிவானது.

இதுதொடா்பாக அந்த மாநில தலைநகா் காந்திநகரில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையம் கூறுகையில், ‘‘கட்ச் மாவட்டத்தில் சனிக்கிழமை நண்பகல் 12.08 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 4.1 அலகுகளாக பதிவானது. அந்த மாவட்டத்தில் உள்ள தோலாவீரா பகுதியின் கிழக்கு-தென்கிழக்கு திசையில் 23 கி.மீ. தொலைவில் பூமிக்கு கீழே 6.1 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது’’ என்று தெரிவித்தது.

எனினும் நிலநடுக்கத்தால் உயிா் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதியும் கட்ச் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டா் அளவுகோலில் 4.0 அலகுகளாக பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

SCROLL FOR NEXT