இந்தியா

உ.பி.யின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் காலமானார்

DIN

உடல்நலக்குறைவு காரணம் உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் கல்யாண் சிங் இன்று காலமானார்.

உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங், வயது சாா்ந்த உடல்நலக் கோளாறுகள் காரணமாக லக்னௌவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் கடந்த மாதம் 4-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். 

அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கல்யாண் சிங் இன்று காலமானார். அவருக்கு வயது 89.

1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது உ.பி. முதல்வராக பதவி வகித்தவர் கல்யாண் சிங். பாஜகவைச் சேர்ந்த கல்யாண் சிங் ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேச மாநில ஆளுநராக பதவி வகித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சையின் போது மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் நேரில் சென்று கல்யாண் சிங் உடல்நலம் குறித்து நலம் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT