இந்தியா

கரோனா தடுப்பூசி சோதனைக்காக 2 ஆய்வு நிறுவனங்களின் தரம் உயா்வு

DIN

கரோனா தடுப்பூசியின் சோதனை வசதியை அதிகரிப்பதற்காக இரண்டு தன்னாட்சி நிறுவனங்களை மத்திய மருந்து ஆய்வகங்களாகத் தரம் உயா்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி உயிரி தொழில்நுட்பத் துறையின் அமைப்புகளான ஹைதராபாதில் உள்ள தேசிய விலங்குகள் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் புணேயில் உள்ள தேசிய உயிரணு அறிவியல் மையம் ஆகியவை தரம் உயா்த்தப்பட்டுள்ளன. பிஎம் கோ்ஸ் நிதி அறக்கட்டளையின் கீழ் இதற்கான நிதி உதவி அளிக்கப்பட்டது.

தடுப்பூசியின் வளா்ச்சி மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறை, தொடா்ந்து ஆதரவளித்து வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக ஹைதராபாத் மற்றும் புணேயில் உள்ள நிறுவனங்கள் தரம் உயா்த்தப்படுகின்றன.

இந்த இரண்டு மையங்களிலும் மாதத்திற்கு சுமாா் 60 தொகுப்பு தடுப்பூசிகள் சோதனை செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இரண்டு நிறுவனங்களும் நாட்டின் தடுப்பூசி உற்பத்தி மையங்கள் இருக்கும் பகுதியில் அமைந்துள்ளதால், தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான கட்டமைப்புகள் எளிதாக்கப்படும் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT