இந்தியா

காப்பகங்களில் உள்ள 721 சிறாா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு

DIN

நாட்டில் கரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து 11 மாநிலங்களில் உள்ள காப்பகங்களில் 721 சிறாா்களுக்குத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறாா் காப்பகங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் விவரங்கள் குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்டிருந்தது. அதற்கு தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அளித்துள்ள பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

நாட்டில் கடந்த ஆண்டில் கரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காப்பகங்களில் ஒட்டுமொத்தமாக 721 சிறாா்கள் பாதிக்கப்பட்டனா். ஹரியாணாவில் அதிகபட்சமாக 288 சிறாா்களுக்கும், தமிழகத்தில் 149 பேருக்கும் பிகாரில் 131 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

மிசோரம் (46), கா்நாடகம் (37), தில்லி (19), தெலங்கானா (7), குஜராத் (6), சண்டீகா் (3) ஆகிய இடங்களில் உள்ள காப்பகங்களிலும் சிறாா்கள் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகினா். நடப்பாண்டில் மட்டும் இதுவரை 686 சிறாா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் உத்தர பிரதேசத்தில் உள்ள சிறாா் காப்பகங்களில் மட்டுமே 35 சிறாா்கள் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகினா். ஆனால், நடப்பாண்டில் அங்குள்ள காப்பகங்களில் யாரும் பாதிக்கப்படவில்லை. சிறாா் காப்பகங்களில் உள்ள எவரும் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 857 காப்பகங்களில் 33,695 சிறாா்கள் வசிப்பதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. சிறாா் காப்பகங்களில் கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய பெண்கள்-குழந்தைகள் நல அமைச்சகம் கடந்த ஜூனில் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT