கோப்புப்படம் 
இந்தியா

தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைகளுக்கு தனிக்கழிவறை

தில்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைகளுக்கு என தனி கழிவறைகள் அமைக்கப்படும் என தில்லி மெட்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN

தில்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைகளுக்கு என தனி கழிவறைகள் அமைக்கப்படும் என தில்லி மெட்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தில்லியில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் திருநங்கைகளுக்கு என தனி கழிவறைகள் அமைக்கப்படும் என தில்லி மெட்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளுக்கான தனிக்கழிவறை வசதியை திருநங்கைகள் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி மெட்ரோ அலுலவர் கூறுகையில், "பாதுகாப்பான இடம் அளித்து திருநங்கைகளுக்கு எதிரான பாலின பாகுபாட்டை களையும் முயற்சியில், மாற்றுத்திறனாளிகளின் கழிவறை வசதியை திருநங்கைகள் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தனிக் கழிவறைகளை தவிர்த்து தங்களின் பாலினத்திற்கு ஏற்ற கழிவறைகளை பயன்படுத்தவும் திருநங்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

தில்லி முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மற்ற பயணிகளுக்கான கழிவறைகளை தவிர்த்து 347 மாற்றுத்திறனாளிகள் கழிவறைகள் உள்ளன. இது அவர்களுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்டது. திருநங்கைகளுக்கு உதவும் வகையில் இக்கழிவறைகளில், ஆங்கிலம், இந்தி என இரண்டு மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்படவுள்ளன. அதேபோல், மாற்றுத்திறனாளிகள்போல் திருநங்கைகளின் சின்னம் பொறிக்கப்பட்ட பலகைகள் வைக்கப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT