இந்தியா

ராஜஸ்தான் சாலை விபத்தில் 12 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம், நாகெளர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆன்மிக சுற்றுலாப் பயணம் சென்றவர்களின் கார் மீது லாரி மோதியதில் 8 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். 

DIN

ராஜஸ்தான் மாநிலம், நாகெளர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஆன்மிக சுற்றுலாப் பயணம் சென்றவர்களின் கார் மீது லாரி மோதியதில் 8 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.
 மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜயினியிலிருந்து ஆன்மிக சுற்றுலாப் பயணம் செய்ய 12 பேர் இரு வாகனங்களில் புறப்பட்டு ராஜஸ்தான் மாநிலம், நாகெளருக்கு வந்தனர். இங்கு ராம்தேவரா, கர்னி மாதா கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
 ஒரு வாகனம் முன்னாலும், அதற்குப் பின்னால் மற்றொரு வாகனமும் பின்தொடர்ந்தபடி சென்றனர்.
 செவ்வாய்க்கிழமை காலை 7 மணி அளவில் நாகெளர் மாவட்டம், பிகானேர்- ஜோத்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ பாலாஜி கோயில் பகுதி அருகே இரு வாகனங்களும் வந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதியது. விபத்து நிகழ்ந்த இடத்துக்கு அருகில் இருந்த பொதுமக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 4 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT