நவம்பரில் மட்டும் 645 முறை கனமழை பதிவு: இந்திய வானிலை மையம் 
இந்தியா

நவம்பரில் மட்டும் 645 முறை கனமழை பதிவு: இந்திய வானிலை மையம்

நவம்பர் மாதத்தில் மட்டும் 645 கனமழைகளும், 168 அதிகனமழைகளும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

DIN

நவம்பர் மாதத்தில் மட்டும் 645 கனமழைகளும், 168 அதிகனமழைகளும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதத்தில் நாடு முழுவதும் பெய்த கனமழை மற்றும் அதிகனமழை குறித்த தரவுகளை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் மட்டும் அதிக எண்ணிக்கையிலான கனமழை பெய்துள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் நவம்பர் மாதத்தில் மட்டும் நாடுமுழுவதும் மொத்தம் 11 மிக அதிக கனமழையும், 645 கனமழையும், 168 அதிகனமழையும் பெய்துள்ளன. இவற்றில் 44 அதிகனமழை ஆந்திரத்திலும், 16 தமிழகத்திலும், அதனைத் தொடர்ந்து 15 கர்நாடகத்திலும், 3 கேரளத்திலும் பெய்துள்ளன.

நவம்பர் மாதத்தில் வழக்கமாக பெய்யும் 30.5 மி.மி. மழை அளவைக் காட்டிலும் கூடுதலாக 56.5 மி.மி. மழைப்பொழிந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT