கோப்புப்படம் 
இந்தியா

மூன்று ஆண்டுகளில் மின்னல் தாக்கி 8,095 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் மின்னல் தாக்கியதில் 8,095 பேர் பலியாகியுள்ளதாக மக்களவையில் புதன்கிழமை மத்திய அரசு பதிலளித்துள்ளது.

DIN

நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் மின்னல் தாக்கியதில் 8,095 பேர் பலியாகியுள்ளதாக மக்களவையில் புதன்கிழமை மத்திய அரசு பதிலளித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்றைய கேள்வி நேரத்தில் மக்களவை உறுப்பினரின் மின்னல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த கேள்விக்கு மத்திய புவி அறிவியல் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் பதிலளித்தார்.

மத்திய இணை அமைச்சர் அளித்த பதிலில்,

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் மின்னலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 2018 முதல் 2020க்குள் நாடு முழுவதும் மின்னல் தாக்கி 8,095 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் 2018ஆம் ஆண்டு  2,357 பேர், 2019ஆம் ஆண்டு 2,876 பேர் மற்றும் 2020ஆம் ஆண்டு 2,862 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 1,210 பேர் பலியாகியுள்ளனர். மேலும், தமிழகத்தில் 203 பேர் 3 ஆண்டுகளில் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

அணியிழையாள் ஆழி இழைத்தாளே!

SCROLL FOR NEXT