இந்தியா

'வேளாண் சட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி தவறை ஒப்புக்கொண்டுள்ளார்' -மக்களவையில் ராகுல் பேச்சு

DIN

வேளாண் சட்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் பேசினார். 

கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து, மூன்று சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்தது. 

எனினும், விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து முறையான பதில் கிடைக்கும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா சனிக்கிழமை தெரிவித்தது. மேலும், விவசாயப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது. 

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் இன்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார். 

தீர்மானத்தின் மீது மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, 'வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் சட்டங்களை ரத்து செய்ததுடன் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்டார். அவர் தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டுள்ளார். அவ்வாறெனில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். 

ஆனால், கடந்த 30-ம் தேதி வேளாண் துறை அமைச்சகத்திடம், போராட்டத்தில் எத்தனை விவசாயிகள் இறந்தார்கள் என்று கேட்கப்பட்டதற்கு தங்களிடம் பதில் இல்லை என்று அரசுத்தரப்பு கூறியுள்ளது. 

பஞ்சாப் அரசு, உயிரிழந்த சுமார் 400 விவசாயிகளுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. அவர்களில் 152 பேருக்கு வேலையும் வழங்கியது. என்னிடம் அதற்கான பட்டியல் உள்ளது. ஹரியாணாவைச் சேர்ந்த 70 விவசாயிகளின் மற்றொரு பட்டியலையும் நாங்கள் தயாரித்துள்ளோம். 

விவசாயிகளுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அவர்களுக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT