விபின் ராவத் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி 
இந்தியா

விபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

வெலிங்டன் ராணுவ மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள விபின் ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார். 

DIN

வெலிங்டன் ராணுவ மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள விபின் ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார். 

கோவையிலிருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு செல்லும்போது ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் புதன்கிழமை பலியாகினர்.

இதையடுத்து வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவர்களின் உடல்களை அங்கிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று ராணுவ வாகனங்கள் மூலம்  மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டரில் உள்ள மேஜர் நாகேஷ் அரங்கிற்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

விபின் ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்து வருகின்றனர். 

அந்தவகையில், விபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 13 பேரின் உடல்களுக்கும் வீர வணக்கம் செலுத்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், 13 பேரின் உடல்கள் சூலூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ராணுவ விமானம் மூலம் தில்லிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“வீட்டுக்குள் இருந்தே அரசியல் செய்கிறோமா?”: தவெக அனந்தஜித் நேர்காணல்

ஹெச் 125 ஹெலிகாப்டர் உற்பத்தியை தொடக்கி வைத்த மோடி - மேக்ரான்!

கேமரூன் கிரீன் அல்ல, ஸ்கேமர் கிரீன்..! திருந்தாத தேர்வுக்குழு!

சூப்பர் 8 சுற்றுக்கு 7 அணிகள் தகுதி; கடைசி இடம் யாருக்கு?

பாதுகாப்பு, திறன் மேம்பாடு, செய்யறிவு.. இந்தியா - பிரான்ஸ் இடையே 20 ஒப்பந்தங்கள் கையொப்பம்!

SCROLL FOR NEXT