இந்தியா

தாக்கத்தை ஏற்படுத்துமா கிரிப்டோ விதிகள்? இறுதி முடிவை எடுக்கவுள்ள பிரதமர் மோடி

DIN

கிரிப்டோ நாணயங்கள் குறித்து முரண்பட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், இதை ஒழுங்கப்படுத்தும் வகையில் கொண்டுவரப்படவுள்ள விதிகள் குறித்த இறுதி முடிவை பிரதமர் மோடி எடுக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கிரிப்டோ நாணயங்கள் குறித்த வரைவு மசோதாவை நிதித்துறை அமைச்சகம் இறுதிப்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளை கேட்க அரசின் பல்வேறு தரப்பினர் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசோதாவுக்காக அனைத்து தரப்பினரிடையேயும் ஒரு மித்த கருத்தை பெறுவதற்காக அலுவலர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிரிப்டோ நாணயங்கள் ஒழுங்குமுறை மசோதா இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நிதித்துறை அமைச்சகம் இதுகுறித்து எந்த விதமான தகவலையும் தெரிவிக்கவில்லை.

கிரிப்டோ நாணயங்களை தடை செய்யவும் அதை மீறி பணத்திற்கு பதில் கிரிப்டோ நாணயங்களை அளித்தால் உத்தரவின்றி கைது செய்வதற்கு மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT