அரசின் சில முடிவுகள் தவறாக இருந்திருக்கலாம்; ஆனால் நோக்கம் தவறல்ல: அமித் ஷா
மோடி தலைமையிலான அரசின் சில முடிவுகள் தவறாக இருந்திருக்கலாம். ஆனால், மத்திய அரசின் நோக்கம் குறித்து யாரும் எந்த கேள்வியும் எழுப்ப முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
இந்தியாஅரசின் சில முடிவுகள் தவறாக இருந்திருக்கலாம்; ஆனால் நோக்கம் தவறல்ல: அமித் ஷா
மோடி தலைமையிலான அரசின் சில முடிவுகள் தவறாக இருந்திருக்கலாம். ஆனால், மத்திய அரசின் நோக்கம் குறித்து யாரும் எந்த கேள்வியும் எழுப்ப முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சில முடிவுகள் தவறாக இருந்திருக்கலாம். ஆனால், மத்திய அரசின் நோக்கம் குறித்து யாரும் எந்த கேள்வியும் எழுப்ப முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
தில்லியில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின்(FICCI) 94-வது ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'கடந்த 7 ஆண்டுகளில் மத்திய அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் சுமத்தப்படவில்லை. அரசின் நோக்கம் எப்போதும் சரியாகவே இருக்கிறது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசில் சில தவறான முடிவுகள் இருந்திருக்கலாம். ஆனால், எங்களின் நோக்கம் தவறல்ல.
கடந்த ஏழு ஆண்டுகளில் நாடு நிறைய மாற்றங்களைக் கண்டுள்ளது என்பதை விமர்சகர்கள்கூட ஒப்புக்கொள்வார்கள். கரோனா தொற்றுநோய்களின்போது கூட அரசு பல கொள்கை முடிவுகளை எடுத்தது. இது நாட்டின் வளர்ச்சியில் நீண்டகால நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
நடப்பு நிதியாண்டில் உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும். பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை அடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதாவது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு பலம் சேர்க்காதவரை வேலையின்மை பிரச்னையைத் தீர்க்க முடியாது என்றார்.