இந்தியா

சுஷாந்த் சிங் மரணம் முதல் இட ஒதுக்கீடு வரை...சர்ச்சைக்கு மத்தியில் பணியாற்றிய சமீர் வாங்கடே

DIN

போதை பொருள் தடுப்பு முகமையில் (என்சிபி) பணியாற்றிவரும் இந்திய வருவாய்துறை அலுவலரான சமீர் வாங்கடேவின் பதவிக்காலம் முழுவதும் சர்ச்சைகளாகவே சூழ்ந்திருந்தன. இந்நிலையில், என்சிபியில் அவரின் பதவிக்காலம் வரும் டிசம்பரம் 31ஆம் தேதியோடு நிறைவடைகிறது என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு, ஐஆர்எஸ் அலுவலராக பணியில் சேர்ந்த சமீர் வாங்கடே, போதை பொருள் தடுப்பு முகமையில் கடந்த 2020ஆம் ஆண்டு பணியாற்றிவருகிறார். தற்போது, போதை தடுப்பு பிரிவின் மும்பை மண்டல் இயக்குநராக உள்ளார். முன்னதாக, வருவாய் புலனாய்வு துறை இயக்குநரகத்தில் பணியாற்றினார்.

போதை தடுப்பு பிரிவின் மண்டல் இயக்குநராக பதவி வகித்த போது, நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பாலிவுட் பிரபலங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தன. அப்போது, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து, இந்தாண்டு அக்டோபர் மாதம், மும்பை கடற்கரை அருகே சொகுசு கப்பலில் சோதனை நடத்தி போதை பொருளை பறிமுதல் செய்தார். அங்கிருந்த, ஹாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்பட பலரை கைது செய்தார்.

ஆனால், கைது நடவடிக்கைக்கு காரணமான சாட்சியங்களின் நம்பகத்தன்மை குறித்து தொடர் கேள்வி எழுப்பப்பட்டது. அதேபோல், ஷாருக் கானிடமிருந்து பணம் பறிக்க என்சிபி அலுவலர்கள் முயல்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. அதேபோல், இஸ்லாமியராக பிறந்தபோதிலும், பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வாங்கடே பணியில் சேர்ந்தார் என்றும் போலி சாதி சான்றிதழ் சமர்பித்தார் என்றும் மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் புயலை கிளப்பினார். 

இந்த குற்றச்சாட்டை வாங்கடே மறுத்த நிலையில், வாங்கடேவின் தந்தை மாலிக்குக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இப்படி பணிக்காலம் முழுவதுமே சர்ச்சையால் சூழப்பட்ட நிலையில், வாங்கடே அடுத்து எங்கு பணியமர்த்தப்பட போகிறார் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT