இந்தியா

ரோஹிணி நீதிமன்ற குண்டுவெடிப்பு: டிஆா்டிஓ விஞ்ஞானி சிறையில் தற்கொலை முயற்சி

DIN

ரோஹிணி நீதிமன்ற வளாக குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆா்டிஓ) மூத்த விஞ்ஞானி பரத் பூஷண் கட்டாரியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பா் 9ஆம் தேதி ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்ற அறை எண் 102-இன் உள்புறம் குறைந்த திறன்மிக்க வெடிபொருள் வெடித்தது. 

இந்த வழக்கில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த வழக்கறிஞரை கொலை செய்வதற்காக டிபன் பாக்ஸில் வெடிபொருள் வைத்த டிஆா்டிஓ மூத்த விஞ்ஞானி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விஷப் பொருளை சாப்பிட்ட பரத் மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது:

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரத் நலமாக உள்ளார். விசாரணைக்கு பிறகே அவர் எதை உண்டார் என்பது தெரியவரும் எனத் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT