தனது தொகுதியின் சாலையை ஹேம மாலினியின் கன்னங்களோடு ஒப்பிட்ட அமைச்சர் 
இந்தியா

ஹேம மாலினியின் கன்னங்களோடு தனது தொகுதியின் சாலையை ஒப்பிட்ட அமைச்சர்

ஜல்கோனிலிருக்கும் தனது தொகுதியின் சாலைகள் அனைத்தும் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான ஹேம மாலினியின் கன்னங்களைப் போல இருக்கும் என்று மகாராஷ்டிர அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையாகிய

DIN


ஜல்கோன்: ஜல்கோனிலிருக்கும் தனது தொகுதியின் சாலைகள் அனைத்தும் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான ஹேம மாலினியின் கன்னங்களைப் போல இருக்கும் என்று மகாராஷ்டிர அமைச்சர் ஒருவர் தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையாகியுள்ளது.

மகாராஷ்டிர அமைச்சரும் சிவ சேனையின் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாப்ராவ் பாட்டீல் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், மக்கள் அனைவரும் தனது தொகுதியிலிருக்கும் சாலைகளை வந்து பார்க்க வேண்டும். அவை மொழுமொழுவென்று ஹேம மாலினியின் கன்னங்களைப் போல இருக்கும்.

நான், 30 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருக்கும் ஏக்நாத் காத்சேவுக்கு சவால் விடுகிறேன். எனது தொகுதிக்கு வந்து, சாலைகளைப் பார்க்கட்டும். சாலைகள் அனைத்தும் ஹேம மாலினியின் கன்னங்களைப் போல இல்லாவிட்டால், நான் என் பதவியை ராஜிநாமா செய்கிறேன் என்று கூறியிருந்தார்.

மகாராஷ்டிர அமைச்சரின் இந்தப் பேச்சு குறித்து கருத்துக் கூறிய பாஜக எம்.பி.யும், நடிகையுமான ஹேம மாலினி, மிகவும் அருவருக்கத்தக்க பேச்சு என்று கூறியுள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, லாலு பிரசாத் யாதவ் இதுபோன்றதொரு கருத்தைக் கூறியிருந்தார். இதனைப் பலரும் தொடர்கிறார்கள். யாராக இருந்தாலும், எந்தப் பெண்ணையும் இவ்வாறு சொல்லக் கூடாது என்றார் ஹேம மாலினி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT