இந்தியா

தில்லி, நொய்டா, குருகிராமில் மோசமாகும் காற்றின் தரம்!

DIN

தில்லி, குருகிராமில் காற்றின் தரம் 'மோசம்' பிரிவில் இருந்து ‘மிகவும் மோசம்’ பிரிவுக்குச் சென்றதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

அதிகளவிலான வாகன இயக்கம், தொழிற்சாலைகள் பயன்பாடு அதிகரிப்பு, விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் தில்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் நேற்று முன்தினம் தில்லி மற்றும் நொய்டாவில் காற்றின் தரம் சற்று மேம்பட்டு  'மோசம்' பிரிவில் இருந்தது. 

ஆனால், இன்று காற்றின் தரம் மோசமடைந்து தில்லி, குருகிராமில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்குச் சென்றது. நொய்டாவில் 'ஆபத்தான நிலை'யில் உள்ளது.  

 தில்லி, நொய்டா, குருகிராமில் காற்றின் தரக்குறியீடு முறையே 385, 507, 319 என்ற அளவில் உள்ளது.

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

SCROLL FOR NEXT