12 முதல் 18 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்னும் சற்று நேரத்தில் உரையாற்றவுள்ளார் என பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இதன்மூலம், பிரதமர் உரையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்த அறிவிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.