ஜனவரி 3 முதல் குழந்தைகளுக்குத் தடுப்பூசி: பிரதமர் மோடி அறிவிப்பு
நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இந்தியாஜனவரி 3 முதல் குழந்தைகளுக்குத் தடுப்பூசி: பிரதமர் மோடி அறிவிப்பு
நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
பிரதமர் பேசியதாவது:
நிறைய நாடுகளில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால், பாதிப்புகள் அதிகரிக்கின்றன.
ஒமைக்ரானை கண்டு மக்கள் பதற்றம் அடையாமல் முகக் கவசம் அணிந்து, கைகளை முறையாகக் கழுவினாலே போதுமானது.
நாட்டில் 18 லட்சம் படுக்கை வசதிகள் தயாராக உள்ளன.
1.40 லட்சம் ஐசியூ படுக்கை வசதிகள் தயாராக உள்ளன.
குழந்தைகளுக்கான ஐசியூ மற்றும் ஐசியூ உதவி இல்லாத 90 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாராக உள்ளன.
நாடு முழுவதும் 4 லட்சம் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
உலகின் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவில் விரைவில் தொடங்கப்படும்.
கரோனா தீவிரத்தன்மையை உணர்ந்து நாட்டில் 141 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவிகிதத்தினர் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
15-18 வயதுடைய குழந்தைகளுக்கு ஜனவரி 3, 2022 முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.
ஜனவரி 10 முதல் முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் ஜனவரி 10, 2022 முதல் முன்னெச்சரிக்கைத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.