முகப்பு
இந்தியா

வடகிழக்கு மாநிலங்களில் (மணிப்பூரில்) முதல் ஒமைக்ரான் தொற்று

வடகிழக்கு மாநிலங்களில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
கோப்புப்படம்
பகிர்:

வடகிழக்கு மாநிலங்களில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. 

அதிகபட்சமாக தில்லி 142, மகாராஷ்டிரம் 141, கேரளம் 57, குஜராத் 49, ராஜஸ்தான் 43, தெலங்கானா 41, தமிழ்நாடு 34, கர்நாடகம் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து வடகிழக்கு மாநிலங்களில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்சானியா நாட்டில் இருந்து மணிப்பூர் திரும்பிய ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இம்பாலில் உள்ள ஜவாஹர்லால் நேரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.