உபி: திருடியதாக தலித் சிறுமி மீது கொடூரத் தாக்குதல், பிரியங்கா காந்தி கண்டனம் 
இந்தியா

உபி: திருடியதாக தலித் சிறுமி மீது கொடூரத் தாக்குதல், பிரியங்கா காந்தி கண்டனம்

உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதியில் திருடியதாகக் கூறி தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியைக் கொடூரமாகத் தாக்கியதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

DIN

உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதியில் திருடியதாகக் கூறி தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமியைக் கொடூரமாகத் தாக்கியதற்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதியில் தலித் சிறுமியை ஒரு குடும்பம் கொடூரமாக தாக்கும் விடியோ இணையத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அக்குடும்பத்தினர் திருட்டில் ஈடுபட்டதற்காக தண்டனை வழங்கப்பட்டது என தெரிவித்தனர்.

இந்நிலையில், இரண்டு ஆண்கள் அச்சிறுமியை தரையில் படுக்க வைத்து கால் பாதங்களில் கட்டையால் தாக்கும் விடியோவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவருடைய டிவிட்டர் பக்கதில் பகிர்ந்து ‘யோகி ஆதித்யநாத் சார், உத்தரப் பிரதேசத்தில் தினமும் தலித்களுக்கு எதிரான வன்முறையில் 34 பேர் பாதிக்கப்படுகிறார்கள். அடுத்த 24 மணி நேரத்தில் தாக்கியவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் காங்கிரஸ் கட்சி தூங்கிக் கொண்டிருக்கிற உங்கள் ஆட்சியை எழுப்பும்’ என தெரிவித்தார்.

அமேதி பகுதி காவல்துறை அதிகாரி அர்பித் கபூர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது போஸ்கோ மற்றும் எஸ்.சி , எஸ்.டி வன்கொடுமை சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

பெத்தவேப்பம்பட்டு, கோவிந்தாபுரம் ஊராட்சிக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஆம்பூா் அருகே பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து

முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பிறந்த நாள்

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT