முகப்பு
இந்தியா

மேற்குவங்கத்தில் பிப்.12 முதல் பள்ளிகள் திறப்பு

மேற்குவங்க மாநிலத்தில் பிப்ரவரி 12-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக மாநிலப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
மேற்குவங்கத்தில் பிப்.12 முதல் பள்ளிகள் திறப்பு
பகிர்:

மேற்குவங்க மாநிலத்தில் பிப்ரவரி 12-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக மாநிலப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநிலக் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி செவ்வாய்க்கிழமை அறிவித்தார். 

கரோனா தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →