முகப்பு
இந்தியா

விவசாயிகள் இனப்படுகொலை: சுட்டுரைக்கு மத்திய அரசு எச்சரிக்கை

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் குறித்த ஹேஷ்டேக்கை நீக்க வேண்டும் என்று சுட்டுரை நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
விவசாயிகள் இனப்படுகொலை: சுட்டுரைக்கு மத்திய அரசு எச்சரிக்கை
பகிர்:

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் குறித்த ஹேஷ்டேக்கை நீக்க வேண்டும் என்று சுட்டுரை நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வேளாண் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் விவசாயிகள் படுகொலை என்ற ஹேஷ்டேக் அதிக அளவில் பகிரப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசு சுட்டுரை நிறுவனத்திற்கு இந்த எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மக்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் படுகொலை என்ற ஹேஷ்டேக் அதிக அளவில் பகிரப்பட்டது. 

இதன் விளைவாக பிரபலங்கள் பலரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதனால் இந்த ஹேஷ்டேக்கை நீக்க வேண்டும் என்று சுட்டுரை நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கையில், கோபத்தைத் தூண்டும் வகையிலான ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு வெறுப்பைத் தூண்டும் வகையிலும், சமூகத்தில் அசாதாரண சூழலை உருவாக்கும் வகையிலும் உண்மைக்குப் புறம்பாக தகவல்கள் பரப்பப்பட்டுவருகிறது. 
விவசாயிகள் இனப்படுகொலை என்ற வார்த்தையை பயன்படுத்துவது பேச்சு சுதந்திரம் அல்ல. அது சட்டம் ஒழுங்கு மீறலுக்கான எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த ஹேஷ்டேக்கை சுட்டுரை நிறுவனம் நீக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →