இந்தியா

18 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் 4ஜி இணைய சேவை

DIN

ஜம்மு-காஷ்மீருக்கு விதிக்கப்பட்டிருந்த இணையத் தடை நீக்கப்பட்டு 4ஜி இணைய சேவை மீண்டும் வழங்கப்படுவதாக ஜம்மு-காஷ்மீர் நிர்வாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக இணைய சேவை வழங்கப்படாத நிலையில் தற்போது ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் 4ஜி இணைய சேவை தொடங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ள ஜம்மு-காஷ்மீர் நிர்வாக செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால், “4 ஜி மொபைல் இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. இந்த சேவைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மீண்டும் தொடங்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT