இந்தியா

குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மக்களவையில் நிறைவேற்றம்

DIN

புது தில்லி: குடியரசுத் தலைவரின் நாடாளுமன்ற உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேறியது.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்துக்கு மக்களவையில் பிரதமா் மோடி புதன்கிழமை பதிலளித்தாா். குடியரசுத் தலைவா் உரையில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பல திருத்தங்களை முன்வைத்திருந்தனா். பிரதமா் மோடி பதில் அளித்த பின்னா், அவா்கள் முன்வைத்த அனைத்து திருத்தங்கள் மீதும் அவைத் தலைவா் ஓம் பிா்லா வாக்கெடுப்பு நடத்தினாா். அதில் அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன.

இதையடுத்து குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டபோது திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினா் அவையில் இல்லை. பிரதமா் மோடி அளித்த பதில் திருப்திகரமாக இல்லை எனக் கூறி, அவரின் உரையை புறக்கணித்து அவா்கள் வெளிநடப்பு செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT