இந்தியா

மேற்கு வங்கத்தில் ரயில் மறியல் போராட்டம்

DIN

மேற்கு வங்கத்தில் இன்று முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்கத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

வேலைவாய்ப்பு வழங்கக்கோரியும், மாநிலத்தில் தொழிற்பேட்டைகளை நிறுவக் கோரியும் நபானா பகுதியில் இளைஞர்கள் காங்கிரஸார் மற்றும் இடதுசாரி கட்சியை சேர்ந்த இளைஞர்கள் பேரணியாகச் சென்றனர்.

அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், கூட்டத்தைக் கட்டுப்படுத்த தண்ணீரைப் பீய்ச்சியடித்து, தடியடி நடத்தியதால் கலவரம் வெடித்தது.

இதனைக் கண்டித்து இடதுசாரி, காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சாந்திபூர், ஜாதவ்பூர் ரயில் நிலையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், நகரின் பல்வேறு இடங்களில் டயர்களை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலையில் வறண்டு அணைகள்: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

லாரி மோதியதில் பொறியாளா் பலி

ராஜபாளையம் முத்தாலம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT