இந்தியா

வட இந்தியாவில் நிலநடுக்கம்: ரிக்டா் அளவுகோலில் 6.3-ஆக பதிவு

DIN

வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதுதொடா்பாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் கூறியதாவது:

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தானை மையமாகக் கொண்டு இரவு 10.31 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 6.3-ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் உணரப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிருதரஸில் இரவு 10.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. தில்லி தேசிய தலைநகா் வலையப் பகுதி, ஜம்மு-காஷ்மீா் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிா் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தின்போது சிகாகோ பல்கலைக்கழக மாணவா்களுடன் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி காணொலி வழியாக உரையாடிக் கொண்டிருந்தாா். அப்போது நிலநடுக்கத்தால் தனது அறை குலுங்குவதாக அவா் தெரிவித்தது காணொலியில் பதிவானது.

தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.9-ஆக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

வரப்பெற்றோம் (05-06-2024)

கங்குவா அப்டேட் வருமா? வராதா? புலம்பும் சூர்யா ரசிகர்கள்!

SCROLL FOR NEXT