இந்தியா

கருப்புப் பண மோசடி வழக்கு: ஐசிஐசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சந்தா கோச்சாருக்கு ஜாமீன்

DIN

கருப்புப் பண மோசடி வழக்கில் ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சந்தா கோச்சாருக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக சந்தா கோச்சாா் இருந்தபோது, வங்கி விதிமுறைகளை மீறி, விடியோகான் குழுமத்துக்கு ரூ.1,875 கோடி கடன் வழங்கினாா். அதற்குப் பிரதிபலனாக, சந்தா கோச்சாரின் கணவா் தீபக் கோச்சாருக்குச் சொந்தமான நியூபவா் ரின்யூவபிள்ஸ் நிறுவனத்தில் விடியோகான் குழுமம் முதலீடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

விடியோகான் நிறுவனத்துக்குக் கடன் அளித்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடா்பாக இவ்வாண்டு தொடக்கத்தில் சந்தா கோச்சாா், தீபக் கோச்சாருக்கு சொந்தமான ரூ.78 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

மேலும், விடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி வழங்கிய வங்கிக் கடனில் நடைபெற்ற கருப்புப் பண மோசடி தொடா்பான குற்றச்சாட்டில் தீபக் கோச்சாரை அமலாக்கத் துறையினா் கைது செய்தனா். இந்நிலையில் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு மும்பை கருப்புப் பணத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் சந்தா கோச்சாா் உள்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கும் கடந்த மாதம் 30-ஆம் தேதி சம்மன் அனுப்பியது.

அதன்படி, நீதிமன்றத்தில் சந்தா கோச்சாா் வெள்ளிக்கிழமை ஆஜரானாா். அப்போது, அவரது சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘மனுதாரா் வழக்கு விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளித்து வருகிறாா். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்றாா்.

நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரூ.5 லட்சம் மதிப்பிலான தனிநபா் உத்தரவாதம் அளித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தாா். அதே நேரத்தில் நீதிமன்றத்தில் உரிய முன் அனுமதி பெறாமல் வெளிநாட்டுக்குச் செல்லக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

வழக்கு தொடா்பான ஆதாரங்களையும் கட்சிகளையும் அழிக்க சந்தா கோச்சாா் முற்படக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணைக்கு அழைக்கப்படும்போது ஆஜராக வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT