இந்தியா

ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு வேளாண், விவசாயிகள் நலத்துறைக்கு அனுமதி

DIN

புது தில்லி: ட்ரோன்கள் பயன்படுத்துவதற்கு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கு, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், விமானப் போக்குவரத்து துறை இயக்குனரகம் ஆகியவை அனுமதி வழங்கியுள்ளன.

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் நாட்டின் 100 மாவட்டங்களில் உள்ள வேளாண் பகுதிகளில் கிராம பஞ்சாயத்து அளவில் உற்பத்தி அளவை மதிப்பிடுவது போன்ற தரவு சேகரிப்புகளுக்கு ட்ரோன்களை பயன்படுத்த இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக் கடிதம் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒராண்டு காலம் அல்லது வான் டிஜிட்டல் தளம் பயன்படுத்தும் வரை, இதில் எது முன்போ அதுவரை அனுமதி செல்லுபடியாகும்.

இதற்கான விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டால் மட்டுமே இந்த அனுமதி செல்லுபடியாகும். வதிமுறைகளை மீறினால் இந்த அனுமதி செல்லாததாகிவிடும். சட்டப்படி நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT