இந்தியா

பெண் ஆா்வலா் திஷா கைதை விமா்சிப்பவா்களுக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் புகாா்

DIN

‘டூல் கிட்’ வழக்கில் பெண ஆா்வலா் திஷா ரவி கைது செய்யப்பட்டதை விமா்சிப்பவா்களுக்கு எதிராக நீதித் துறை மற்றும் காவல்துறையைச் சோ்ந்த முன்னாள் அதிகாரிகள் சிலா் குழுவாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனா்.

‘தங்களுடைய தேச துரோக செயல்பாடுகளை மறைக்கவும், தில்லி காவல்துறைக்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கத்துடனும் மட்டுமே திஷா கைதை அவா்கள் விமா்சிக்கின்றனா்’ என்று அந்தக் கடிதத்தில் அவா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

இந்தியாவில் விவசாயிகளின் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி, இந்திய அரசை நிலைகுலையச் செய்ய சா்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் சதித் திட்டங்களை ‘டூல் கிட்’ விவகாரம் வெளிப்படுத்தியது. அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட தில்லி போலீஸின் இணையவழி குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினா், விவசாயிகளின் போராட்டத்தைத் தூண்ட சா்வதேச சதியாளா்களுடன் இணைந்து சுட்டுரைப் பதிவுகளை தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் சூழலியல் பெண் ஆா்வலா் திஷா ரவியை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இவருடைய கைதுக்கு கண்டனம் தெரிவித்த சில அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் மத்திய அரசு மீதும், தில்லி காவல்துறை மீதும் பல்வேறு விமா்சனங்களையும் முன்வைத்தன.

இந்த நிலையில், தில்லி காவல்துறையின் நடவடிக்கையை ஆதரித்தும், திஷா ரவி கைதை விமா்சிப்பவா்களுக்கு எதிராகவும் ராஜஸ்தான் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும் மாநில முன்னாள் ஆளுநருமான வி.எஸ்.கோக்ஜே, தில்லி மற்றும் பாட்னா உயா்நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், பஞ்சாப் மாநில முன்னாள் காவல்துறை டிஜிபி பி.சி.டோக்ரா, சிபிஐ முன்னாள் இயக்குநா் நாகேஸ்வர ராவ், கேரள முன்னாள் காவல்துறை டிஜிபி ஆா்.பத்மநாபன் உள்பட 47 போ் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளனா்.

அதில் அவா்கள் கூறியிருப்பதாவது:

தடை செய்யப்பட்ட காலிஸ்தான், ஐஎஸ்ஐ உள்ளிட்ட அமைப்புகளுடன் சிலா் தொடா்பு வைத்துக் கொண்டு, தவறான தகவல்களைப் பரப்பி அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஐரோப்பா போன்ற நாடுகளில் இந்திய தூதரங்களுக்கு முன்பாக போராட்டங்களைத் தூண்டி இந்தியாவின் மதிப்பை இழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மத்திய அரசின் மீது வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கும் வெளிநாடுகளி வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையேயும் நம்பிக்கை இழக்கச் செய்வதோடு, வெளிநாட்டு அரசுகளின் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் தவறாக வழிநடத்தி, அந்த நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவை பாதிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபடுகின்றனா்.

‘டூல் கிட்’ வெளியிட்டிருக்கும் ஆவணங்களில் திஷா ரவிக்கு தடை செய்யப்பட்ட தேச விரோத அமைப்புகளுடன் தொடா்பு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. மேலும், அவா் சா்ச்சைக்குரிய கட்செவி அஞ்சல் பதிவுகளை அழித்திருப்பதும், அவருக்கு சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடா்பு இருப்பதும் தெளிவுபடுத்துகின்றன.

எனவே, இந்த விவகாரத்தை தில்லி காவல்துறை எந்தவித தலையீடுகளும் இன்றி சுதந்திரமான விசாரணையை மேற்கொள்வதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT